வயோதிப தம்பதிகள் தனித்திருந்த வீட்டிற்குள் நுழைந்து திருடர்களால் ஒருவர் கொலை - - Yarl Voice வயோதிப தம்பதிகள் தனித்திருந்த வீட்டிற்குள் நுழைந்து திருடர்களால் ஒருவர் கொலை - - Yarl Voice

வயோதிப தம்பதிகள் தனித்திருந்த வீட்டிற்குள் நுழைந்து திருடர்களால் ஒருவர் கொலை -
யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

மீசாலை பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

 இதன் போது 3 பேர் கொண்ட திருடர் கூட்டம், முதியவர்கள் தனித்து வாழும் வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

முதிய தம்பதியை கட்டி வைத்து, பொருட்கள் இருக்குமிடம் குறித்து சித்திரவதை செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இக் கொடுர சம்பவத்தில்
 அல்லாரை றோட் மீசாலையை சேர்ந்த 80 வயதுடைய செல்லையா சிவராசா என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபரை கொலை செய்து விட்டு நகைகளையும் கொள்ளை அடித்துக் கொண்டு திருடர்கள் தப்பிவிட்டார்கள்.

இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post