பொதுமக்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால் புதுவருட காலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆபத்து - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - Yarl Voice பொதுமக்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால் புதுவருட காலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆபத்து - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - Yarl Voice

பொதுமக்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால் புதுவருட காலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆபத்து - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்பொதுமக்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக புதுவருடத்துடன் மூன்றாவது கொரோனா அலைக்கான சாத்தியங்கள் உள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு பொருட் கொள்வனவிற்காக பெருமளவு மக்கள் வர்த்தக நிலையங்களின் முன்னாள் காணப்படுவதை ஏற்கனவே நாங்கள் பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகளால் கூட இதனை முற்றிலும் கட்டுப்படுத்தமுடியாது என தெரிவித்துள்ள அசேல குணவர்த்தன கொரோனா வைரஸ் ஆபத்தினை தவிர்ப்பதற்கு பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியது பொதுமக்களே என குறிப்பிட்டுள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு பொதுமக்களிற்கான பல சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளதாக அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post