இன்று இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் இரவுநேர ஊரடங்கு உத்தரவு! இம்மாதம் 31ம் திகதி வரை நீடிப்பு ! - Yarl Voice இன்று இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் இரவுநேர ஊரடங்கு உத்தரவு! இம்மாதம் 31ம் திகதி வரை நீடிப்பு ! - Yarl Voice

இன்று இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் இரவுநேர ஊரடங்கு உத்தரவு! இம்மாதம் 31ம் திகதி வரை நீடிப்பு !
கடுகதியில் அதிகரித்து வரும் கோவிட் 19 தொற்றை குறைகுமுகமாக இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெளிவுபடுத்தியுள்ளார்.

 நாளை அதிகாலை 4மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் இரவு 11 மணிக்கு அமுல்பத்தப்படும். இந்த ஊரடங்கு நடைமுறை இம்மாதம் 31ம் திகதி வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் இந்த இரவு நேர ஊரடங்கு வேளையில் எவரும் வெளியில்  செல்ல அனுமதி மறுக்கப்படும். தேசிய அடையாள இலக்கத்தொடரின் இறுதி எண்ணுக்கேற்ப வீட்டிற்கு ஒருவரே அதிகாலை நான்கு மணிக்குப்  பின் வெளியில் செல்ல அனுமதிக்கப்படும்   

ஒருவரின் அடையாள அட்டை இலக்கத்தொடரின்  இறுதியில் இரட்டை எண்  இருப்பின் அவர் நாட்காட்டியில் இரட்டை எண் வரும் திகதிகளிலும் (உதாரணமாக 18,20,22,24,26,28.30 ஆகிய திகதிகளில் ) ஒருவரின் அடையாள அட்டை இலக்கத்தொடரின்  இறுதியில் ஒற்றை எண்  இருப்பின் அவர் நாட்காட்டியில் ஒற்றை எண் வரும் திகதிகளிலும் (உதாரணமாக 17,19,21,23,25,27,29,31) வெளியில்செல்ல அனுமதிக்கப்படுவர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post