யாழ் மாவட்டத்தில் இதுவரையில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புக்கள் தொடர்பிலும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும்்அரச அதிபர் விளக்கம் - Yarl Voice யாழ் மாவட்டத்தில் இதுவரையில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புக்கள் தொடர்பிலும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும்்அரச அதிபர் விளக்கம் - Yarl Voice

யாழ் மாவட்டத்தில் இதுவரையில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புக்கள் தொடர்பிலும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும்்அரச அதிபர் விளக்கம்



யாழில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 66 பேருக்கும் நேற்று 58 பேருக்கும் யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த தகவல்படி இன்றைய தினம் 47 பேருக்கும் பிசிஆர் பரிசோதனை மூலம் யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்்மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.

 கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு   பின்னர்  1980 பேருக்கு யாழில் கொரோனா தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

யாழில் இறப்பு 25 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது .நேரடி தொற்றாளர்களுடன்  தொடர்புடைய 2485 குடும்பங்களைச் சேர்ந்த 6805 நபர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 

இதனைவிட கடந்த வாரத்தில்  கொடிகாமம் வடக்கு ,கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராமங்கள்  
 தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

மக்கள் பெரும்பாலும் ஒத்துழைப்பு வழங்கினாலும் கூட ஒரு சிலர் சட்டத்தை மீறுவதால் ஏனையவர்களுக்கும் அது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது ஆகவே சுகாதார விடயங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

 தற்காலிக பயணத்தடை  என்பது சமூகத் தொற்றை கட்டுப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டுள்ளது .

அத்தியாவசிய போக்குவரத்து அனுமதி அத்தியாவசிய தேவையான அளவு மருத்துவம் விமான நிலையம் செல்லும் போன்ற ஒரு விசேட அனுமதி வழங்கப்படுகிறது அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருள்களின் அத்தியாவசிய பொருள்களின் அத்தியாவசிய பொருட்களை வைக்கும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது 


திடீரென மரணங்கள் இடம் பெற்றால் நெருங்கிய உறவினர்கள் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். 

தொழிற்துறை சிலவற்றுக்கு சுற்றுநிரூபத்துக்கமைய
சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது அத்தியாவசிய தேவைகள் அனைத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில நாட்களுக்கே இத்தடை நீடிக்கும்.  மே 17 அதிகாலை இத்தடை நீங்கும்.

மாகாணங்களுக்கிடையிலான தடை தொடர்ந்தும் மே 31 வரை காணப்படும் இதில் ஏதும் மாற்றம் இருந்தால் அரசாங்கம் அதனை தெரிவிக்கும்.

யாழ் மாவட்டத்தில் இக்கட்டான சூழலில் அவதானமாகவும் பொறுப்புணர்வுடனும்  மக்கள் நடக்க வேண்டும் .இத்தகைய
நெருக்கடி நிலையை சாதகமாக பயன்படுத்தி வேறு விதத்தில் துஷ்பிரயோகம் செய்வது முற்றாக தடை செய்யப்படுவதுடன் அது சட்டவிரோத செயலாக கருதப்படும்.அவ்வாறான விடயங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையும் ஏற்படும் .

யாழ்ப்பாண குடாவிற்குள் கடல் வழியாக நுழைபவர்களால் ஆபத்தான சூழல் ஏற்படுகிறது .கடந்த வாரம் அவ்வாறான நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான செயலில் யாரையும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம் .

பொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பொருள் விநியோகத்திற்கு யாழ் குடாநாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .ஆகவே வணிகர் சங்கங்கள் வர்த்தகர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு இடையறாது சேவை கிடைக்க வழி செய்ய வேண்டும். எரிவாயு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது .எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எங்களுக்கு தெரிவித்துள்ளது. 


தேவையற்ற ஒன்று கூடல்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் .அண்மையில் தெல்லிப்பழையில் 30 பேர் இவ்வாறான நிகழ்வில் பங்குபற்றி அவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தற்போது 5 பேருக்கு மட்டுமே  ஒன்று கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது அனுமதியை மீறி அதிகம் பேர் ஒன்று சேர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .


 நித்திய பூசை விசேட பூசை என்பனவற்றின் போது மதகுருமார்கள் மற்றும் உபயதாரர்கள் கலந்து கொள்ள முடியும்.

அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றிலும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .ஆகவே பகுதியளவில் சேவையை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரலாம். இருந்தபோதும் அரசாங்க செயற்பாடு இடையறாது நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

நோயாளர்களை பேணிப் பாதுகாக்க கடந்த வாரம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியை கொரோனாவுக்கான சிகிச்சை நிலையமாக  மாற்றியுள்ளோம். நாவற்குழியில் 600 பேருக்கான கட்டில் வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 4 ஆதார வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகளை சுகாதார பிரிவினர் செய்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post