-சட்டத்தையும் மீறி திருமண விழா- புதுமண தம்பதியர் உட்பட 11 பேருக்கு கொரோனா...! - Yarl Voice -சட்டத்தையும் மீறி திருமண விழா- புதுமண தம்பதியர் உட்பட 11 பேருக்கு கொரோனா...! - Yarl Voice

-சட்டத்தையும் மீறி திருமண விழா- புதுமண தம்பதியர் உட்பட 11 பேருக்கு கொரோனா...!
சுகாதார சட்ட விதிகளை பின்பற்றாமல் நடைபெற்ற திருமண விழாவில் புதுமண தம்பதியர் உட்பட 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கொஸ்வத்த மெத கிரிமெடியாவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி மெதகிரிமெடியாவ பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சுகாதார சட்ட விதிமுறைகளைப் பேணாமல் 140 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  இவர்கள் அனைவருக்கும் பி. சீ. ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

 இதன்போதே புதுமணத் தம்பதியினர் உட்பட 11 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post