அடிக்கடி மின்வெட்டால் அவதியுறும் நயினாதீவு மக்கள் - Yarl Voice அடிக்கடி மின்வெட்டால் அவதியுறும் நயினாதீவு மக்கள் - Yarl Voice

அடிக்கடி மின்வெட்டால் அவதியுறும் நயினாதீவு மக்கள்நயினாதீவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின்வெட்டு இடம்பெறும் நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதோடு மின்சாரசபைக்கு அறிவித்தும் சீர்செய்யப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நயினாதீவு பிரதேசத்தில் இலங்கை மின்சாரசபையின்  மின்பிறப்பாக்கி ஒன்றின் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுமார் ஒருமாத காலத்துக்கும் மேலாக மின்சாரம் அடிக்கடி  துண்டித்தே வழங்கப்பட்டு  வருகிறது.

இது தொடர்பாக மின்பிறப்பாக்கி இயக்குநரிடம் வினவியபோது மின்பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள இயந்திர கோழாறே இதற்கு காரணம் எனவும் மேலிடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

இதற்கு எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் இதுகுறித்து மக்களால் இலங்கை மின்சாரசபைக்கு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மின்சார சபையின் அசமந்தத்தினால் தற்போதும் மின்வெட்டு தொடர்வதால் தாம் பெரும் கஷ்டத்தினை அனுபவிப்பதாக நயினாதீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 1200 குடும்பங்கள் வாழும்  கஷ்ரப் பிரதேசமான இத்தீவில் மின் துண்டிப்பால் தாம் அனுபவிக்கும் கஸ்டங்களை எவருமே கண்டுகொள்ளாமை கவலையளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post