வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த வைத்தியர்கள் - 12 ஆண்டின் பின்னர் அகற்றம்- - Yarl Voice வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த வைத்தியர்கள் - 12 ஆண்டின் பின்னர் அகற்றம்- - Yarl Voice

வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த வைத்தியர்கள் - 12 ஆண்டின் பின்னர் அகற்றம்-
இந்தியாவில் பிரசவத்தின்போது வைத்தியர்கள்  கவனக்குறைவால் அறுவைச் சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்துள்ளனர்.
குறித்த கத்தரிக்கோல் தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு சத்திரசிக்கிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திருத்தணி பகுதியை சேர்ந்த குபேந்திரி (வயது-33) என்பவர்  கடந்த 2008 ஆம் ஆண்டு திருத்தணி அரசு வைத்தியசாலையில்  பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

இவர்களுக்கு தற்போது, 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. 

பிரசவத்துக்கு பிறகு குபேந்திரிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 18 ஆம் திகதி இவருக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டதால், குபேந்திரியை, அவரது கணவர் திருவள்ளுர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குபேந்திரியின், வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் வை;தியர்கள்  ஸ்கேன் அறிக்கையும் அவரிடம் கொடுக்க மறுத்ததையடுத்து அவரது கணவர்  மனைவியை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு மீண்டும் அவருக்கு ஸ்கேன் எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையில் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பதை கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குறித்த கத்தரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது.

இது குறித்து கணவன் தனது மனைவிக்கு 3 ஆவது பிரசவத்தின்போதுதான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது வைத்தியர்கள் அஜாக்கிரதையாக வயிற்றுக்குள் கத்திரிகோலை வைத்து தைத்துவிட்டனர் என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு 'இ-மெயில்' மூலம் புகார் மனு அளித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post