கொரோனா பாதித்த சிறுவனுடன் மின்னொளியில் கிரிக்கெட் போட்டி –நயினாதீவில் 15 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்- - Yarl Voice கொரோனா பாதித்த சிறுவனுடன் மின்னொளியில் கிரிக்கெட் போட்டி –நயினாதீவில் 15 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்- - Yarl Voice

கொரோனா பாதித்த சிறுவனுடன் மின்னொளியில் கிரிக்கெட் போட்டி –நயினாதீவில் 15 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்-




கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சிறுவன் தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறி மின்னொளியில் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதால் நயினாதீவில் 15 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்தவாரம் குறித்த சிறுவன் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிறுவனுக்கு நேற்று முன்தினம்  கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுவன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றமை தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை சிறுவனுடன் தொடர்பிலிருந்த 15 குடும்பங்களை  தனிமைப்படுத்தியதுடன் மேலும் தொடர்பானவர்கள் குறித்து தகவல் சேகரித்து வருகின்றனர்.

மேலும் குறித்த சிறுவன் மற்றும் கூடி விளையாடிய அனைவர் மீதும் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துவருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post