திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்; திருமண நிகழ்வு 15 பேருடன் வரையறை : பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - Yarl Voice திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்; திருமண நிகழ்வு 15 பேருடன் வரையறை : பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - Yarl Voice

திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்; திருமண நிகழ்வு 15 பேருடன் வரையறை : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
நாட்டில் உடற்பயிற்சி நிலையங்கள்(ஜிம்), ஸ்பாக்கள், திரையரங்குகள் என்பன மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்து மூடப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று தெரிவித்தார். 

திருமணப் பதிவுகளை அதிகபட்சமாக 15 பேருடன் மேற்கொள்ளலாம். ஆனால் திருமணக் கொண்டாட்டங்கள் அல்லது நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை.

இத்தகைய பதிவுகளை மேற்கொள்கையில் உள்ளூர் பொலிஸாருக்கு மற்றும் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post