கிராமங்களுக்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் ஹர்திக், குருணால் பாண்டியா சகோதரர்கள் - Yarl Voice கிராமங்களுக்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் ஹர்திக், குருணால் பாண்டியா சகோதரர்கள் - Yarl Voice

கிராமங்களுக்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் ஹர்திக், குருணால் பாண்டியா சகோதரர்கள்
மும்பை வீரர்கள் ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா ஆகியோர் கிராமப்பகுதிகளுக்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முடிவெடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தலை விரித்தாடுகிறது. இந்நிலையில் தனிநபர்கள் முதல் நிறுவனங்கள் வரை உள்நாட்டிலும் பிறகு வெளிநாட்டு உதவிகளும் குவிந்து வரும் நிலையில் மும்பை வீரர்கள் ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா ஆகியோர் கிராமப்பகுதிகளுக்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முடிவெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா கூறும்போது, “மருத்துவர்கள், மருத்துவ முன் களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி. குருணால், நான், என் தாயார், எங்கள் குடும்பம் முழுதுமே உதவுவதற்கான வழிமுறைகளைக் கண்டு வருகிறோம். இந்தியாவின் கிராமப்பகுதிகளுக்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முடிவெடுத்துள்ளோம். கிராமப்பகுதிகளில் மருத்துவ உள்கட்டமைப்புகளுக்கு இத்தகைய உதவி தேவைப்படுகிறது.

நாடு முழுதும் அல்லாடி வருகிறது, இந்நிலையில் நாட்டுக்காக, மக்களுக்காக எங்கள் நன்றிக்கடனை இப்படி உதவி மூலம் செலுத்த விரும்புகிறோம்.

நாடு நாளொன்றுக்கு 4 லட்சம் கொரோனா பாதிப்புகளை தொட்டு திண்டாடி வருகிறது. இந்நிலையில் தனிநபர்கள், நிறுவனங்ள், அயல் நாட்டு உதவிகள் குவிந்து வருகின்றன.

விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், ஷிகர் தவான், ஜெய்தேவ் உனாட்கட், ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கமின்ஸ், பிரெட் லீ, வெஸ்ட் இண்டீஸின் நிகோலஸ் பூரன், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் போன்ற ஐபிஎல் அணிகள் ஆகியவை நன்கொடை வழங்கி உதவி வருகின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post