புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 261 பேருக்கு இன்று கொரோனா தொற்று - Yarl Voice புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 261 பேருக்கு இன்று கொரோனா தொற்று - Yarl Voice

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 261 பேருக்கு இன்று கொரோனா தொற்றுபுதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 261 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலை கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பணியாளர்களில் இதுவரை 261  பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதனால் அங்கே பெரும் பரபரப்பு நிலவுகின்றது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதனையடுத்து அங்கு பணியாற்றும் 926 பேருக்கும் இன்று அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இவ்வாறு இடம்பெற்ற  பரிசோதனையில் கொரோனா கண்டறியப்படும் பணியாளர்களிற்கு முதல்கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனையும் ஏனைய பணியாளர்களிற்கு இரண்டாம் கட்டமாகவும் பி.சி.ஆர் பரிசோதனை இடம்பெறவுள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழுவினரே இன்றைய தினம் இந்த விசேட  பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதேநேரம் இவ்வாறு கொரோனா கண்டறியப்பட்டவர்களின் வீடுகள் பழகியவர்களின் வீடுகள் என ஆயிரந்தை தாண்டிய குடும்பங்கள் தனிமைப்படுத்தளிற்கு உட்பட வேண்டிய அவலமும் காணப்படுகின்றது. 

குறித்த ஆடைத் தொழிற்சாலை அடிப்படை சுகாதார நடமுறையை பின்பற்றாத காரணத்தினால் மூடப்பட வேண்டும் என பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பல தடவை சுட்டிக்காட்டியும் அதன் உரிமையாளர் தென்பகுதியை சேர்ந்தவர் என்பதன் அடிப்படையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் விளைவே இந்த நிலமைக்கு காரணம் என தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post