அடுத்த தலைமுறையின் எழுச்சியே உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்கு வித்திடும் - அங்கஜன் இராமநாதன் - Yarl Voice அடுத்த தலைமுறையின் எழுச்சியே உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்கு வித்திடும் - அங்கஜன் இராமநாதன் - Yarl Voice

அடுத்த தலைமுறையின் எழுச்சியே உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்கு வித்திடும் - அங்கஜன் இராமநாதன்


 

நாம் கல்வி ,பொருளாதார நிலையில் இருந்த நிலையை விட ஒரு படி மேலாக எழுச்சி காண்பதன் ஊடாகவே மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்கு வித்திட முடியும்.
 
யுத்தம் முடிவடைந்து பன்னிரெண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்று மீளவும் எங்கள் பிரதேசங்களைக் கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் முயற்சி செய்து வருகிறோம். 

உள்நாட்டு யுத்தம் மக்கள் மனங்களில் பல வடுக்களை ஆழமாகப் பதித்துவிட்டுச் சென்றுள்ளது. எம் மக்கள் இழந்தவை ஏராளம்.எம் மக்கள் இழந்தவைக்கு ஈடு ஏதுமில்லை. இந்த இழப்புக்களைத் தாண்டியும் முன்னேறத் துடிக்கும் உறவுகளுக்கு கை கொடுக்க வேண்டும். 

எமது அடுத்த சந்ததி கல்வி, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் கொடிகட்டிப் பறக்க வேண்டும். அது தான் பல ஏக்கங்களோடு உயிர்நீத்தவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிசமைக்கும். 

மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தில் உயிர்நீத்த அனைத்து உயிர்களின் ஆத்மாக்களும் சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்திப்போமாக. 

அந்த ஆத்மாக்களின் ஆசிர்வாதம் எமது வளர்ச்சிக்கு என்றும் துணையாக நிற்கும் என நம்புகிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post