கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ரஸ்யா உதவ வேண்டும் - சஜித் வேண்டுகோள் - Yarl Voice கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ரஸ்யா உதவ வேண்டும் - சஜித் வேண்டுகோள் - Yarl Voice

கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ரஸ்யா உதவ வேண்டும் - சஜித் வேண்டுகோள்

  


இலங்கையின் கொரோனா வைரஸ் நிலைமையயை கட்டுப்படுத்துவதற்கு ரஸ்யா உதவவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஸ்ய தூதுவர் யு_ரி மட்டேரியை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு நடமாடும்  மருத்துவமனைகள் பிசிஆர் இயந்திரங்கள் தீவிரகிசிச்சை பிரிவு கட்டில்கள் போன்றவற்றை வழங்குமாறு சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்றாவது கொரோனா வைரஸ் அலை காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியான காலத்தில் உள்ளது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் தீவிரசிகிச்சை பிரிவின் கட்டில்கள் பிசிஆர் இயந்திரங்கள் போன்றவற்றிற்கான அவசரதேவை காணப்படுகி;ன்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை உதவவேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கின்றேன் எனவும் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் முக்கிய எதிர்கட்சி கொரோனா வைரசிற்னு எதிரான போராட்டத்தில் இணைந்துகொள்ளதீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post