இலங்கையில் 10 நாட்களில் 13 ஆயிரம் பேருக்கு தொற்று! - Yarl Voice இலங்கையில் 10 நாட்களில் 13 ஆயிரம் பேருக்கு தொற்று! - Yarl Voice

இலங்கையில் 10 நாட்களில் 13 ஆயிரம் பேருக்கு தொற்று!
நாட்டில் கடந்த 10 நாட்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 7 நாட்களாக நாளாந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளதுடன், அதில் தொடர்சியாக நான்கு நாட்கள் 1,500 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2020 மார்ச் மாதத்தில் இருந்து ஒக்டோபர் மாதம் வரையில் 3000 வரையான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் கடந்த பெப்ரவரி மாதத்தில் அந்த எண்ணிக்கை 80 ஆயிரம் வரையில் உயர்வடைந்திருந்ததுடன், அதன்பின்னர் கடந்த தமிழ் சிங்கள புத்தாண்டு வரையில் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது.

இதன்படி புத்தாண்டு வரையில் 90 ஆயிரம் பேர் வரையிலானோரே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

 இந்நிலையில் புத்தாண்டுக்கு பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை வேகமாக உயர்வடைந்துள்ளதுடன் கடந்த சில நாட்களாக அது 1500 ஐயும் கடந்துள்ளது.

இதன்படி கடந்த 10 நாட்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post