கொரோனா வைரஸ் குறித்து அரசாங்கம் தெரிவிப்பதை பொதுமக்கள் நம்புவதில்லை - ஜேவிபியின் தலைவர் - Yarl Voice கொரோனா வைரஸ் குறித்து அரசாங்கம் தெரிவிப்பதை பொதுமக்கள் நம்புவதில்லை - ஜேவிபியின் தலைவர் - Yarl Voice

கொரோனா வைரஸ் குறித்து அரசாங்கம் தெரிவிப்பதை பொதுமக்கள் நம்புவதில்லை - ஜேவிபியின் தலைவர்
கொரோனா குறித்து அரசாங்கம் வெளியிடும் தரவுகள் மற்றும் தகவல்களை மக்கள் நம்புவதில்லை அவற்றின் மீதுஅவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகளிற்கு தலைமை தாங்க வேண்டியவர்கள் சுகாதார அமைச்சின் தலைமை அதிகாரிகளே என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் எனினும் வேறு நபர்கள் தலைமைபதவிக்கு நியமிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் வழங்கும் தகவல்களில் பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் அரசாங்கம் வழங்கும் தகவல்களை எவரும் நம்புவதில்லை அது அறிவிக்கும் விதிமுறைகளை எவரும் பின்பற்றுவதில்லை என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post