யாழ்ப்பாண புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக இராதாகிருஸ்ணன் நியமனம் - Yarl Voice யாழ்ப்பாண புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக இராதாகிருஸ்ணன் நியமனம் - Yarl Voice

யாழ்ப்பாண புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக இராதாகிருஸ்ணன் நியமனம்
யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராக தற்போதைய வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் முத்துகுமாரு-  இராகிருஸ்னன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த சந்திரராயா கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றுச் சென்றது முதல் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் இரவிச்சந்திரன் பதில் கடமையாற்றினார். இக் காலத்தில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்திற்கு பலர் போட்டியிட்டனர். இந்த நிலையிலேயே எதிர் வரும் 5ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கில் ஏற்படும் வெற்றிடத்திற்கு தற்போதைய வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் நியமிக்கப்படுகின்றார்.

இதேநேரம் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய உமாநிதி புவனராயா கடந்த 26ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் அந்த இடத்திற்கு துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன் பதில் கடமையாற்றுகின்றார்.்
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரான பிரட்லி ஜெனாட்  மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்படுகின்றார். இதன் காரணமாக மன்னாரிலும் வெற்றிடம் ஏற்படுகின்றது.்

வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரான சு.சுந்தரசிவம் யூன் 28ஆம் திகதி ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post