பொலார்ட் ருத்ரதாண்டவம் - சென்னை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் - Yarl Voice பொலார்ட் ருத்ரதாண்டவம் - சென்னை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் - Yarl Voice

பொலார்ட் ருத்ரதாண்டவம் - சென்னை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்



பொலார்ட்டின் அதிரடியில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது மும்பாய் இந்தியன்ஸ்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பொலார்ட் 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களை பெற்று கொடுத்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மொய்ன் அலி 58 ரன்களும், டூபிளசிஸ் 50 ரன்களும், கடைசி நேரத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய அம்பத்தி ராயூடு 72 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா 35 ரன்களும், டிகாக் 38 ரன்களும் எடுத்து கொடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். 

இதனையடுத்து களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த க்ரூணல் பாண்டியா – கீரன் பொலார்டு கூட்டணி சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இதில் குறிப்பாக வாணவேடிக்கை காட்டிய கீரன் பொலார்டு 17 பந்துகளில் அசுரவேகத்தில் அரைசதமும் அடித்ததன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலை மும்பைக்கு ஏற்பட்டது. 

போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இந்த கடைசி ஓவரை வீசிய லுங்கி நிகிடி ஒரு பந்தை கூட சரியாக வீசாததாலும், கீரன் பொலார்டு முன்னதாக கொடுத்த இரண்டு கேட்சுகளை சென்னை வீரர்கள் கோட்டைவிட்டதாலும் போட்டியின் கடைசி பந்தில் இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 

ருத்ரதாண்டவம் ஆடிய கீரன் பொலார்டு 34 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக சாம் கர்ரான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷர்துல் தாகூர், ஜடேஜா மற்றும் மொய்ன் அலி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post