போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள வேளை பிறந்தநாள் கொண்டாட்டம்- ஷங்கிரிலா ஹோட்டலிற்கு எதிராக சட்டநடவடிக்கை - Yarl Voice போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள வேளை பிறந்தநாள் கொண்டாட்டம்- ஷங்கிரிலா ஹோட்டலிற்கு எதிராக சட்டநடவடிக்கை - Yarl Voice

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள வேளை பிறந்தநாள் கொண்டாட்டம்- ஷங்கிரிலா ஹோட்டலிற்கு எதிராக சட்டநடவடிக்கைநாடளாவியரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஷங்கிரிலா ஹோட்டலில் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாட்டங்கள் இடம்பெற்றமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் ஹோட்டல் நிர்வாகத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்றுகாலையில் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் கீழ் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் இவர்களை கைதுசெய்த பொலிஸார் பின்னர் இவர்களை பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் 25 பேர் கலந்துகொண்டனர் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் பலரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சிசிடிவியின் உதவியுடன் ஏனையவர்களை இனம் காணும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post