உங்க நாட்டுல கொரோனா இருந்தப்ப நாங்க வந்து விளையாடலையா?- மைக் ஹசிக்கு கவாஸ்கர் பதிலடி - Yarl Voice உங்க நாட்டுல கொரோனா இருந்தப்ப நாங்க வந்து விளையாடலையா?- மைக் ஹசிக்கு கவாஸ்கர் பதிலடி - Yarl Voice

உங்க நாட்டுல கொரோனா இருந்தப்ப நாங்க வந்து விளையாடலையா?- மைக் ஹசிக்கு கவாஸ்கர் பதிலடி
இந்தியாவில் உலகக்கோப்பை நடத்துவது ஆபத்து என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி கூறிய கருத்தை கவாஸ்கர் கண்டித்துள்ளார்.

இந்தியாவில் இந்த ஆண்டு உலகக்கோப்பை டி20 தொடர் நடக்கவிருக்கிறது, இங்கு கொரோனா அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது, ஆனாலும் இந்தியாவில் உலகக்கோப்பை நடத்துவது ஆபத்து என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி கூறிய கருத்தை கவாஸ்கர் கண்டித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் 8 அணிகள் ஆடின, வீரர்கள், பயிற்சியாளர்கள் என கொரோனா பயோ-பபுளையும் மீறி ஊடுருவியது, இதனையடுத்து ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. இப்படியிருக்கையில் அதிக அணிகள் இடம்பெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்டை இங்கு நடத்தலாமா என்று மைக் ஹசி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மைக் ஹசி கூறியபோது,

இந்தியாவில் ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்றன, பாதுகாப்பு வளையத்தையும் மீறி கொரோனா தொற்றியது, எனக்கே கொரோனா தொற்று ஏற்பட்டது, வீரர்களுக்கு ஏற்பட்டது, பயிற்சியாளர்கள், மைதான பராமரிப்பாளர்கள் என்று கொரோனா தொற்றியது.

இப்போது உலகக்கோப்பையில் மேலும் அதிகப்படியான அணிகள் பங்கேற்கும், பல நகரங்களுக்கு பயணிக்க நேரிடும், வீரர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வெண்டும். இதில்தான் ஆபத்தே உள்ளது.

டி20 உலகக்கோப்பையை நடத்த யுஏஇ போன்ற பாதுகாப்பான இடங்களே சிறந்தது. உலகின் பல நாடுகளும் இந்தியாவின் கொரோனா நிலைமைகளை முன்னிட்டு விளையாட வர தயக்கம் காட்டுகின்றனர், என்றார்.

இது கவாஸ்கரின் உணர்வுகளைத் தூண்டி விட்டுள்ளது, கவாஸ்கர், ஹசிக்கு பதிலடி கொடுக்கும் போது, “ஆஸ்திரேலியாவில் நாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருந்தது. அதற்காக தொடரை நிறுத்தவில்லை, அப்போது ஆஸி. கிரிக்கெட் வாரியத்துக்கு பணம் தான் பெரிதாகப் பட்டது.

ஏன் ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரும் கொரோனாவுக்கு மத்தியில்தானே நடந்தது. ஆகவே இதை ஒரு காரணமாகக் கூற வேண்டாம்.

ஆகஸ்ட் மாதம் வரை பார்ப்போம் அப்போதும் சரியாகவில்லை எனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக் கொள்ளலாம். அதற்குள் தவறான கணிப்பை வெளியிட வேண்டாம். ஆஸ்திரேலியாவில் கொரோனா இருந்த போது தொடரை நடத்தியது இப்போது இந்தியாவில் நடத்தக் கூடாது என்று கூறுவது ஆச்சரியமாக உள்ளது” என்றார் கவாஸ்கர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post