கொரோனா தொற்று நீங்க வேண்டி யாழிலுள்ள இந்து ஆலயங்களிலும் விசேட வழிபாடு - Yarl Voice கொரோனா தொற்று நீங்க வேண்டி யாழிலுள்ள இந்து ஆலயங்களிலும் விசேட வழிபாடு - Yarl Voice

கொரோனா தொற்று நீங்க வேண்டி யாழிலுள்ள இந்து ஆலயங்களிலும் விசேட வழிபாடு


கோரோனா வைரஸ் தொற்று பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து தொற்று நீங்கவேண்டி இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் மற்றும்  மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் இன்று மாலை 5.30 மணிக்கு இந்த வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.


குறித்த வழிபாடுகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

வழிபாடுகளின் நிறைவில் இந்திய மக்களைப் பிராத்தித்து அந்த நாட்டுப் பிரதமருக்கான கடிதங்கள் இந்தியத் துணைத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


0/Post a Comment/Comments

Previous Post Next Post