மாநகர சபையின் சாதாரண செயற்பாடுகளை கூட பயங்கரவாத செயற்பாடுகளாக சித்தரிக்கிறது அரசு - மணிவண்ணண் குற்றச்சாட்டு - Yarl Voice மாநகர சபையின் சாதாரண செயற்பாடுகளை கூட பயங்கரவாத செயற்பாடுகளாக சித்தரிக்கிறது அரசு - மணிவண்ணண் குற்றச்சாட்டு - Yarl Voice

மாநகர சபையின் சாதாரண செயற்பாடுகளை கூட பயங்கரவாத செயற்பாடுகளாக சித்தரிக்கிறது அரசு - மணிவண்ணண் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் மாநகர சபையின் சாதாரண செயற்ப்பாடுகளை கூட பயங்கரவாத செயற்பாடுகளாக அரசு சித்தரிக்கின்றது என்று யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். 

இதன் ஒரு அங்கமாகவே யாழ்.மாநகர சபையின் தண்டம் அறவிடும் பணியாளர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இவ்வாறான செயற்ப்படுகள் மூலம் தமிழர்களையும், தாயகத்தினையும் அச்சமான சூழ்நிலையில் வைத்திருக்க அரசு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

யாழ்.மாநகர சபையின் தண்டம் அறவிடும் பணியாளர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

யாழ்ப்பாணம் மாநகர சபையி செயற்பாடுகளை முடக்கும் வகையான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. 

என்னை கைது செய்ததன் மூலம் சபையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை முழுமையாக முடக்கிவிடலாம் என்றே அரசு நினைத்தது. 

ஆனாலும் அரசாங்கத்தின் சட்டத்திற்கு முரணான செயற்ப்படுகளை எதிர்த்து கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினர்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியதன் காரணமாக அரசின் திட்டம் கைகூடவில்லை. 

இதன் தொடர்ச்சியாக இப்போது சபையின் தண்டம் அறவிடும் பணியாளர்கள் கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அளைக்கப்பட்டுள்ளனர். 

இந்த விசாரணை அழைப்பு என்பது தமிழ் மக்களுக்கு அரசாங்கம் விடும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டும். 

தமிழர் தாயகத்தி நன்மைகளுக்காக முன்னின்று செயற்ப்படுபவர்களையும், அவர்களுடன் இனைந்து பயணிப்பவர்களையும்  இல்லாமல் செய்யும் நடவடிகையையே அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. 

விசாரணைக்கு அழைக்கப்பட்ட பணியாளர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை, மாநகர முதல்வராகவும், சட்டத்தரணியாகவும் நிச்சியம் செய்வேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post