பிரசவத்தின் பின்னர் தாயார் பரிதாபகரமாக உயிரிழப்பு - யாழில் சம்பவம் - Yarl Voice பிரசவத்தின் பின்னர் தாயார் பரிதாபகரமாக உயிரிழப்பு - யாழில் சம்பவம் - Yarl Voice

பிரசவத்தின் பின்னர் தாயார் பரிதாபகரமாக உயிரிழப்பு - யாழில் சம்பவம்குழந்தைப் பேற்றிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயார் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் ஜுவசுமன் மேரி சலுயா, என்னும் 29 வயதையுடைய,  பார் ஒழுங்கை தெல்லிப்பளையை சேர்ந்தவரே உயிரிழந்தவராவார்.

இரண்டாவது குழந்தைப் பேறு காலத்தில் இதய சிகிச்சை பெற்று வந்த இந்த  தாயார் ஓர் ஆண் குழந்தையை பிரசவித்து சிறிது நேரத்தில் இதய நோயாள் பெரும் சிரம்ப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக அவசர சிகிச்சைப பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

இவ்வாறு அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டவர் 2 மணி நேரம் வைத்தியர்களின் பெரும் முயற்சி பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார். இருப்பினும் குழந்தை சுகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post