முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்றுகூடினால் குண்டோடு கைது - இராணுவத்தளபதி எச்சரிக்கை - Yarl Voice முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்றுகூடினால் குண்டோடு கைது - இராணுவத்தளபதி எச்சரிக்கை - Yarl Voice

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்றுகூடினால் குண்டோடு கைது - இராணுவத்தளபதி எச்சரிக்கை
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவுவதை கட்டப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள்  மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா கட்டுப்பாட்டுக்காக விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. 

நினைவுகூரலுக்கு மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினால் அரசில்வாதிகள் மக்கள் என்ற வேறுபாடு இல்லாது கைதுசெய்யப்படுவார்கள். 

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை என தெரிவித்துள்ளார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post