மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனமாக செயற்பட வேண்டாம் - கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து - Yarl Voice மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனமாக செயற்பட வேண்டாம் - கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து - Yarl Voice

மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனமாக செயற்பட வேண்டாம் - கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து




பாடசாலைகளையும் ஏனைய கல்வி நிறுவனங்களையும் மீள திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் கண்மூடித்தனமாக செயற்படுகின்றார் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதும் பாடசாலைகளையும் ஏனைய கல்வி நிறுவனங்களையும் திறப்பது குறித்து புதன்கிழமை மருத்துவ கல்வி துறை நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக கல்விஅமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  நாட்டில் மூன்றாவது அலை ஆரம்பமான வேளை மேல்மாகாணத்தில் மாத்திரம் பாடசாலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்தார் ஆனால் மறுநாள் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு கல்வியமைச்சர் முடிவெடுப்பதில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

43000 மாணவர்களிற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதை கல்வியமைச்சர் தவிர்க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post