முள்ளிவாய்க்காலில் சிவாஜி அஞ்சலி - Yarl Voice முள்ளிவாய்க்காலில் சிவாஜி அஞ்சலி - Yarl Voice

முள்ளிவாய்க்காலில் சிவாஜி அஞ்சலி
தமிழ் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்


இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் முகமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது அந்த வகையிலே இந்த வருடம் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மிக எழிமையான முறையில் இடம்பெற்று வருகின்றன

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளா

கத்தில் சுடர் ஏற்றுவதற்கு பலருக்கு தடை உத்தரவுகள் பெறப்பட்டு இருக்கின்ற நிலைமையிலும் இன்று இனப்படுகொலை வாரத்தின் ஆறாவது நாளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமாகிய எம்.கே சிவாஜிலிங்கம் அவர்கள் சற்று முன்னர் முள்ளிவாய்க்காலில் நினைவு தூபியில் சென்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post