சுன்னாகத்தில் வீட்டில் வைத்து சாராயம் விற்றவர் கைது! -பெருமளவு சாராயமும் மீட்பு- - Yarl Voice சுன்னாகத்தில் வீட்டில் வைத்து சாராயம் விற்றவர் கைது! -பெருமளவு சாராயமும் மீட்பு- - Yarl Voice

சுன்னாகத்தில் வீட்டில் வைத்து சாராயம் விற்றவர் கைது! -பெருமளவு சாராயமும் மீட்பு-


சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த சாராயப் போத்தல்களும் மீட்கப்பட்டன. 

சுன்னாகம் பொலிஸாருக்கு  கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து விரைந்து செயற்பட்ட அவர்கள் குறித்த  நபரைக் கைது செய்தனர். 

கொரோனா கட்டுப்பாட்டிற்காக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே மதுபான நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மதுபானத்தை வீட்டில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். 

ஏனைய இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் இரகசிய தகவல்களை வழங்குமாறும் அவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


0/Post a Comment/Comments

Previous Post Next Post