விசாரரைணக்காக அழைத்து செல்லப்பட்ட பாதள உலக குற்றவாளி சுட்டுக்கொலை - பொலிஸ் பேச்சாளர் - Yarl Voice விசாரரைணக்காக அழைத்து செல்லப்பட்ட பாதள உலக குற்றவாளி சுட்டுக்கொலை - பொலிஸ் பேச்சாளர் - Yarl Voice

விசாரரைணக்காக அழைத்து செல்லப்பட்ட பாதள உலக குற்றவாளி சுட்டுக்கொலை - பொலிஸ் பேச்சாளர்கடுவல வந்தரமுல்ல பகுதியில் பாதளஉலக குற்றவாளி உருஜூவ பொலிஸாரினால் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உருஜூவ மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதை பொலிஸ் பேச்சாளர் நியாயப்படுத்தியுள்ளார்.

சந்தேகநபரை விசாரணைக்காக அழைத்து சென்றவேளை இடம்பெற்ற சம்பவம் காரணமாக அவர் மீதுதுப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நான்கு கொலைகள் உட்பட பல குற்றங்களிற்காக சந்தேக நபர் தேடப்பட்டுவந்தார் எனதெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் அவர் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார் நேற்றுவரை அவரை விசாரணைக்கு உட்படுத்தினோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நவகமுவ பொலிஸில் இருந்து மேலதிக  விசாரணைக்காக வந்துருமுல்ல  பகுதிக்கு சந்தேகநபரை அழைத்துச் சென்றவேளை இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் அவரை காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தோம் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துப்பாக்கிகளை மீட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post