யாழ். பல்கலைக்கழகம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு! - Yarl Voice யாழ். பல்கலைக்கழகம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு! - Yarl Voice

யாழ். பல்கலைக்கழகம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு!நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் திணைக்களத்தின் நடைமுறைகளுக்குக் கட்டுப்படாமல் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்துக்குப் பெற்றோர்கள் முறைப்பாடு செய்திருப்பதாகக் கூறி, யாழ்ப்பாணம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுகாதாரத் திணைக்களத்தின் நடைமுறைகளைப் பொருட்படுத்தாமல் யாழ். பல்கலைக்கழக துணை மருத்துவ பீடத்தில் கல்விச் செயற்பாடுகள் நேற்று வரை இடம்பெற்றமை பொலிசாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 இதனையடுத்து இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடமிருந்து பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளர் ஒருவர் கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post