அரசின் பொறுப்பற்ற தன்மையே கொரோனா மூன்றாவது அலைக்கு காரணம்; சபையில் சுட்டிக்காட்டினார் சுமந்திரன் - Yarl Voice அரசின் பொறுப்பற்ற தன்மையே கொரோனா மூன்றாவது அலைக்கு காரணம்; சபையில் சுட்டிக்காட்டினார் சுமந்திரன் - Yarl Voice

அரசின் பொறுப்பற்ற தன்மையே கொரோனா மூன்றாவது அலைக்கு காரணம்; சபையில் சுட்டிக்காட்டினார் சுமந்திரன்



கொரோனா பாதுகாப்புச் சட்டங்களை இயற்றாது, நான் கொண்டுவந்திருந்த தனிநபர் சட்டமூலத்தினையும் பொருட்படுத்தார், அரசாங்கம் அசமந்தமாக பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டமையே மூன்றாவது அலைக்கு காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

கொரோனா சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த புதன்கிழமை (05-05) இடம்பெற்ற இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவருடைய உரையில் மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் எதிர் கட்சிகளின் தரப்பிலிருந்தும் கருத்துக்களை வினவியதன் அடிப்படையில் அரச தரப்பின் நிர்வாக முறை தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு ஆக்கபூர்வமான பரிந்துரைகளையும் முன்வைக்க விரும்புவதை தெரிவித்தார்.
முதலாவதாக இந்த நோய்த்தொற்று நிலைமை கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்வதையும், கடந்த வருடத்தில் பாராளுமன்றம் இந்நோய் பரவலை தடுப்பது தொடர்பாக ஆராய வேண்டிய தருணத்தில் கலைக்கப்பட்டது. எதிர் காட்சிகள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தினை கூட்டும்படி கோரிக்கைவைத்து போதும் அரசியல் இலாபம் கருதி அரசு அதனை தவிர்த்தது
அன்றைய காலகட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சிறிதாக இருந்தபோதும், தற்போது நிலைமை கைமீறி பாரதூரமான நிலைக்கு சென்றுள்ளது, முறையான தீர்மானமெடுக்கும் நடைமுறை இன்மையினால் மருத்துவ துறையினர் மற்றும் முன்னிலையில் இந்நோய் பரவலோடு போராடும் அனைவரது நிலைமையினையும் மேலும் அச்சுறுத்தலுக்கு அரசு உள்ளாக்குகிறது.
அதிகளவிலான உலக நாடுகள் இந்த நோய்தொற்று பரவலின் ஆரம்ப நிலையிலேயே புதிய சுகாதார சட்டங்களை உருவாக்கின.இலங்கை இன்னமும் 100 வருடங்களுக்கும் பழமையான சட்டங்களையே கொண்டுள்ளது, இவ்வாறான நோய்தொற்று சூழலினை கையாள இப்பழைய சட்டங்கள் போதுமானதாக இல்லை.
நீதி அமைச்சர் புதிய சுகாதார சட்டங்கள் இயற்றப்படும் என்று கூறியிருந்தபோதும் இன்னமும் அவை இயற்றப்படவில்லை. இதில் அரசு அசமந்தமாக செயற்படுகின்றது. அரசு இதனை செயற்படுத்த தவறியதன் விளைவாக கடந்த வருடம் நான்  தனி நபர் சட்டமூலம் ஒன்றினை முன்மொழிந்திருந்தேன்.
அத்தோடு அது தொடர்பான முதலாவது விவாதம் கடந்த மாதம் 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்பதாக சபையில் அதனை விவாதிக்கவில்லை . அத்தனிநபர் மசோதா ஒரு முன்மொழிவு மாத்திரமே என்பதோடு எவ்வித அரச தரப்பு முயற்சியும் அற்ற நிலையில் அத னையாவது பரிசீலிக்க அரசு தவறியிருக்கிறது.
அரசின் பொறுப்பற்ற தன்மையே இன்று இந்நோய் பரவலின் மூன்றாவது அலையினை எதிர்நோக்க வழிவகுத்ததோடு, முழு நாட்டினை முடக்குவது அவசியமாகின்றது.
கடந்த வருடம் ஜூன் மாதம் மனித உரிமைகள் அணைக்குழுவும் புதிய சுகாதர சட்டங்களைஅறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தெரிவித்து ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றினை சமர்பித்ததது,
ஒரு வருட காலமாக அரசு இவை தொடர்பாக எவ்வித நடவடிக்கையினையும் எடுக்க வில்லை. தற்போதைய சூழலில் தனி நபர் சுதந்திரமாகிய நடமாடும் சுதந்திரத்தினை கட்டுப்படுத்த நடைமுறை சுகாதார சட்டங்கள் போதுமானதாக இல்லை.
அதேபோல ஆயுர்வேத மருத்துவ பிரிவினருக்கு கொரோனா தோற்றாளர்களை பராமரிக்க இயலுமானால் தனியார் துறையினருக்கும் அவர்களை பராமரிக்க அனுமதியளிக்க வேண்டும். அத்தோடு அரசாங்கம் முறையான பொறுப்புள்ள நடைமுறைகளை முன்னெடுத்து தேவையான புதிய சுகாதார சட்டங்களை உருவாக்கவேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post