பொதுமக்களின் உயிர்களை பலிகொடுக்க வேண்டாம்! அரசிடம் ரணில் வேண்டுகோள் - Yarl Voice பொதுமக்களின் உயிர்களை பலிகொடுக்க வேண்டாம்! அரசிடம் ரணில் வேண்டுகோள் - Yarl Voice

பொதுமக்களின் உயிர்களை பலிகொடுக்க வேண்டாம்! அரசிடம் ரணில் வேண்டுகோள்கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவது குறித்த மருத்துவ ஆலோசனையை அரசாங்கம் பெறவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு 30மில்லியன் தடுப்பூசிகள்  தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இந்த வருடம் 30 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவது சாத்தியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு  இலங்கைக்கு புதிய திட்டம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது டோஸ் மருந்தினை பெற்றவர்களிற்கு இரண்டாவது டோஸினை வழங்க வேண்டியது அவசியம் இதற்கான மருந்தினை இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தடுப்பூசிகளை வழங்குகின்றது ஆனால் அனைத்து மக்களுக்கும் அது கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்;க பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பொதுமக்களின் உயிர்களை பலிகொடுக்கவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த நவம்பரில் தடுப்பூசி திட்டத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருந்தால் தற்போது தடுப்பூசிக்கு பிரச்சினை வந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post