முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை வீழ்த்தியது வங்கதேசம் - Yarl Voice முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை வீழ்த்தியது வங்கதேசம் - Yarl Voice

முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை வீழ்த்தியது வங்கதேசம்
முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 33 ஓட்டங்களால் வெற்றி பெற்றது வங்கதேச அணி.

இலங்கை அணியுடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஆரம்பமாகியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் தமிம் இக்பால் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை மட்டும் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் சகிப் அல் ஹசன் 15, தமிம் இக்பால் 52, ரஹீம் 84, மஹமதுல்லா 54 ஓட்டங்களைப் பெற பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் தனஞ்செய டீ சில்வா 3 விக்கெட்டுக்களையும், சமீர, குணதிலக மற்றும் சன்டகன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

258 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஹசரங்க 74, குசல் பெரேரா 30, குசல் மென்டிஸ் 24, குணதிலக 21 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் சார்பில் மெகிடி ஹசன் மிராஷ் 4, முஷ்டபிர் ரகுமான் 3, முகமது சைபுதீன் 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர். 
ஆட்டநாயகனாக 84 ஓட்டங்களை விளாசிய முஸ்தபீர் ரஹீம் தெரிவானார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post