தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகளை வழங்கிய தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் - Yarl Voice தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகளை வழங்கிய தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் - Yarl Voice

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகளை வழங்கிய தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்

 

கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாகவும், தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியதன் காரணமாகவும் கோண்டாவில் கிழக்குப் பகுதியில் 25 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 இக்குடும்பங்கள் விடுத்த 
வேண்டுகோள்களுக்கு அமைவாக அவர்களுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கடந்த வியாழக்கிழமை 
(27.05.2021) உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. 

பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் வழிகாட்டல்களுக்கு அமைவாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் 
பொ. ஐங்கரநேசன் இப்பகுதிக்கு நேரடியாகச் சென்று உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார். 

இலங்கை முழுவதும் தற்போது முடக்க நிலையில் இருந்தாலும் அவ்வப்போது பயணத்தடை தளர்த்தப்படுவதால் பொது மக்கள் வெளியே சென்று தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூடியதாக உள்ளது. 

ஆனால், கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் வெளியே சென்றுவர முடியாததால் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.0/Post a Comment/Comments

Previous Post Next Post