யாழில் புதிதாக 22 தடுப்பூசி நிலையங்கள் - அரச அதிபர் அறிவிப்பு - Yarl Voice யாழில் புதிதாக 22 தடுப்பூசி நிலையங்கள் - அரச அதிபர் அறிவிப்பு - Yarl Voice

யாழில் புதிதாக 22 தடுப்பூசி நிலையங்கள் - அரச அதிபர் அறிவிப்பு


நாளை முதல் 22  புதிய தடுப்பூசி போடும் நிலையங்கள் உருவாக்கப்படுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்

 யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் இடம்பெற்ற தடுப்பூசி போடும் முகாமில் கலந்து கொண்ட போதே அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி போடும்  பணிகள்   தற்போது நடந்து வருகிறது சில இடங்களில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போடுகிறார்கள் சில இடங்களில் ஆர்வம் குறைவாக உள்ளது. 

சினோபாம் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும். இது பல இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் தற்போது இந்த தடுப்பூசி கிடைத்துள்ளது .ஆகவே மக்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தடுப்பூசியைப் போட வேண்டும்.

 நாங்கள் இதை நேற்று ஆரம்பித்த போது பலரும் தயக்கம் காட்டிய  நிலையே இருந்தது .நேற்று எமது இலக்கில் 52 வீதத்தையே எம்மால் அடைய முடிந்தது .அடுத்து சில தினங்களுக்குள் இதனைச் செய்து முடிக்க வேண்டும் .

ஆகவே பொதுமக்கள் தங்கள் கிராம சேவகர் பிரிவிலுள்ள தடுப்பூசி போடும் மத்திய நிலையங்களுக்கு சென்று அச்சமின்றி தடுப்பூசியை செலுத்த முடியும் தடுப்பூசி போடும் போது அவர்களுக்கு ஏதாவது நோய் அல்லது ஒவ்வாமை ஏற்படுமானால் சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டலைப் பின்பற்றமுடியும். 

நாளை மேலும் 22  புதிய தடுப்பூசி போடும் நிலையங்கள் உருவாக்கப்படும்.
அந்த  நிலையங்கள் பற்றிய விவரங்கள் கிராம உத்தியோகத்தர் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post