யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இராணுவம் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் - Yarl Voice யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இராணுவம் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் - Yarl Voice

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இராணுவம் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள்யாழ் நகரில் மக்களுடைய நடமாட்டத்தை குறைப்பதற்காக அதிகமான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு பூராகவும் கடந்த வெள்ளிக்கிழமை அமுழ்ப்படுத்தப்பட்ட பயணத்தடை இன்று அதிகாலை 4 மணிக்கு சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மக்களுடைய நடமாட்டம் மற்றும் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்ப்பதற்காக யாழ் நகரின் பிரதான வீதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் நகருக்குள் அவசர தேவை தவிர்ந்த ஏனைய வாகணங்கள் உள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள அதே வேளை வீதியினால் செல்லுபவர்கள் மறிக்கப்பட்டு அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லுபவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றார்கள்.

அத்தோடு யாழ் நகரின் ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள அதே வேளை பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post