முடக்கத்துக்குள் குழு அட்டகாசம் பெண்கள் உட்பட் மூவர் படுகாயம் -கைது செய்ய பொலிஸார் பின்னடிப்பு- - Yarl Voice முடக்கத்துக்குள் குழு அட்டகாசம் பெண்கள் உட்பட் மூவர் படுகாயம் -கைது செய்ய பொலிஸார் பின்னடிப்பு- - Yarl Voice

முடக்கத்துக்குள் குழு அட்டகாசம் பெண்கள் உட்பட் மூவர் படுகாயம் -கைது செய்ய பொலிஸார் பின்னடிப்பு-
முல்லைத்தீவு முள்ளியவளை ஹிச்சிராபுரம் பகுதியில் கிராமத்துக்குள் புகுந்து பெண்கள் உட்பட பலரை தாக்கி அட்டகாசம் புரிந்த குழுவினரால்  கிராம மக்கள் பயத்தில் உறைந்தனர்.

கடந்த 20 ஆம் திகதி இரவு ஹிச்சாபுரம் பகுதியில் புகுந்து இரும்பு கம்பிகள் பொல்லுகள் வாள்கள்  கொண்டு குழுவொன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலின் போது இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் சி.சி.ரி.வி காணொளி ஆதாரங்கள் கொடுத்தும் இதுவரை பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்  மாறாக ஊடகங்களுக்கு தாக்குதல் குறித்து தகவல் குடுக்க வேண்டாம் என பொலிசார் தெரிவித்ததாகவும் பாதிக்கப்ட்டவர்கள் கருத்து வெளியிட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post