இந்தியாவை மிரட்டி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுடன் இலங்கையிலும் ஒருவர் அடையாளம்! - Yarl Voice இந்தியாவை மிரட்டி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுடன் இலங்கையிலும் ஒருவர் அடையாளம்! - Yarl Voice

இந்தியாவை மிரட்டி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுடன் இலங்கையிலும் ஒருவர் அடையாளம்!இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றானது மிக வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், குறித்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர் அம்பாறை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் பிரசாத் கொலம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கிருமி அதிகரிக்குமாக இருந்தால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி, மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இந்த கிருமி, கொவிட் வைரஸ் தொற்றுடன் எவ்வாறு இணைந்தது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நோய் அம்பாறை பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post