துறைமுக நகர சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள்சக்தி ஆர்ப்பாட்டம் - Yarl Voice துறைமுக நகர சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள்சக்தி ஆர்ப்பாட்டம் - Yarl Voice

துறைமுக நகர சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள்சக்தி ஆர்ப்பாட்டம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சட்டமூலம் குறித்த விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இலங்கையின் வரலாற்றில் இன்றைய நாள் முக்கியமான நாள் நாட்டின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு அரசியல் சுதந்திரம் ஒற்றையாட்சி முறை ஆகிய அனைத்தும் இன்னொரு நாட்டிடம் தாரைவார்க்கப்பட்டுள்ளன என சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
தேசப்பற்றற்ற சட்மூலத்தை தோற்கடிப்பதற்கு எதிர்கட்சி  முயல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பொதுமக்களுடன் பரஸ்பர புரிந்துணர்விற்கு வந்து இந்த சட்டமூலத்தை கைவிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post