தனியார் துறையில் கடமையாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை வேலைக்கு அழைக்க வேண்டாம் - தொழில் திணைக்களம் - Yarl Voice தனியார் துறையில் கடமையாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை வேலைக்கு அழைக்க வேண்டாம் - தொழில் திணைக்களம் - Yarl Voice

தனியார் துறையில் கடமையாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை வேலைக்கு அழைக்க வேண்டாம் - தொழில் திணைக்களம்
தனியார் துறையில் கடமையாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை வேலைக்கு அழைக்க வேண்டாம் என தொழில் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கொவிட் -19 தொற்றிலிருந்து கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாக்கும் வகையில் மேற்படி கோரிக்கையானது முன்வைக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் தொழிலாளர் ஆணையளரான ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தியினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் முகாமைத்துவத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சிக்கல் நிலையை கருத்திற்கொண்டு கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே தங்க அனுமதிக்குமாறும் தனியார் துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post