விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழப்பு - Yarl Voice விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழப்பு - Yarl Voice

விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழப்புமானிப்பாய் உரும்பிராய் வீதியில் கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை பயனளிக்காமல் இருவரும் உயிரிழந்தனர் என இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இறப்பு விசாரணைக்காக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்த மோகனதாஸ் பிறேமாவதி (வயது-68) என்ற தாயாரும் அவரது மகனான மோகனதாஸ் திலீபன் (வயது-32) என்பவருமே உயிரிழந்தனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழிபட காரில் பயணித்த போது, மானிப்பாய் - உரும்பிராய் வீதியில் கார் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியது.

அதில் சாரதியும் அவரது தாயாரும் படுகாயமடைந்தனர். காரில் பயணித்த மேலும் ஐவர் காயமடைந்தனர் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post