பெண் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணியும் யாழில் களமிறக்கம் - Yarl Voice பெண் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணியும் யாழில் களமிறக்கம் - Yarl Voice

பெண் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணியும் யாழில் களமிறக்கம்


நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றினை  கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணிப்போரை  கண்காணிப்பதற்காக, 

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் பெண் போலீசாரையும் உள்ளடக்கிய போலீஸ் மோட்டார் சைக்கிள் அணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

யாழ்ப்பாண குடாநாட்டின் முக்கிய வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் போலீஸ் மோட்டார் சைக்கிள் அணி பயணிப்போரை வழிமறித்து சோதனையில் ஈடுபடுவதோடு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்போர் எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post