புதிய சட்டமா அதிபராக ராஜரத்தினம் நியமனம் - Yarl Voice புதிய சட்டமா அதிபராக ராஜரத்தினம் நியமனம் - Yarl Voice

புதிய சட்டமா அதிபராக ராஜரத்தினம் நியமனம்புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்தினம் பொறுப்பு பிரமாணம் எடுத்துக்கொண்டார் 

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்  முன்னிலையில் இந்த பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
 
சஞ்சய ராஜரத்தினம் அவர்கள்  நாட்டின் 48வது சட்ட மா அதிபர் ஆவார்.
 
சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள ராஜரத்தினம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி மன்றாடியார் நாயகம், மேலதிக மன்றாடியார் நாயகம், சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் மற்றும் பதில் மன்றாடியார் நாயகம் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
 
கொழும்பு புனித பீட்டர் கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ள அவர்,

லண்டனில் உள்ள குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

ராஜரத்தினம் இங்கிலாந்து மற்றும் வேல்சின் மன்றாடியார் ஆவார்.
 
அவர் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார்.

குடியியல் மற்றும் குற்றவியல் சட்டத்துறைகளில் விரிவான அனுபவத்தை பெற்றுள்ள அவர், நீண்டகாலமாக உயர் நீதிமன்றங்களில் முன்னிலை ஆகியுள்ளார்.
 
இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களில் ஆலோசகர் பொறுப்பையும் வகித்துள்ள அவர்,

இலங்கை சட்ட ஆணைக்குழு, சட்டக் கல்விப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினருமாவார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post