எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் - வணிக பிரிவில் கிளிநொச்சியில் முதலிடம் பெற்ற மாணவி டர்சிகா - Yarl Voice எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் - வணிக பிரிவில் கிளிநொச்சியில் முதலிடம் பெற்ற மாணவி டர்சிகா - Yarl Voice

எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் - வணிக பிரிவில் கிளிநொச்சியில் முதலிடம் பெற்ற மாணவி டர்சிகா



இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக வந்து எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் என  வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிளி/கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி மகேந்திரம் டர்சிகா 

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழலையும் கருத்தில் கொள்ளாது தனது தந்தை கல்விக்கா கூலி தொழிளையும் மேற்கொண்டும் எனது தயார் ஆடுகள் வளர்த்தும் அதில் வருகின்ற வருமானத்தில் வீட்டு செலவுகளையும் கவனித்து அதில் எஞ்சிய வருமானத்தில் எனது கல்லவியை தொடர்ந்து  இன்று வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தில் வணிகப்பிரிவில் தோற்றி கிளிநொச்சி மாவட்டத்தில்  3A பெறுபேறுகளைப்பெற்று முதல் நிலை பெற்றமை மிகவும் சந்தோஷத்தில் பூரிப்படைந்தால் டர்சிகா.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான. கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள கோரக்கன்கட்டு வை. எம்.சி எனும் குக் கிராமத்தில் வசிக்கும் குறித்த மாணவியே இவ்வாறு பெறுபேறுகளை பெற்றமை குறிப்பிடத்தக்க விடையம்.

தனது இவ்வாறு பெறுபேறுகளை பெறுவதட்கு உறுதுணையாக இருந்த எனது பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், தனியார் கல்விநிலைய ஆசிரியர்களையும் மற்றும் எனது இரண்டு அண்ணாக்களுக்கும் பெரு மகிழ்ச்சியுடன் நன்றிகளையும் தெரிவித்தார் டர்சிகா.

0/Post a Comment/Comments

Previous Post Next Post