கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலவரையறையின்றி ஜபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு - Yarl Voice கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலவரையறையின்றி ஜபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு - Yarl Voice

கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலவரையறையின்றி ஜபிஎல் போட்டிகள் ஒத்திவைப்புகொரோனாவினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளை ஐபிஎல்லைக் கொண்டு இனியும் மூடி மறைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கட் வீரர்களுக்கும் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த முடிவை லட்சக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிப்படவோ அன்றேல் தேவையான ஒட்சிசன் வாயுவை பெற்றுக்கொள்ளவோ முடியாமல் திணறியபோது தாமாகவே எடுத்திருக்கவேண்டும்.

 அதுதான் தவறியிருப்பினும் ஆயிரக்கணக்கானவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டும் பலரது சடலங்களை எரிப்பதற்கே நீண்ட வரிசையில் மக்கள் திணறிக்கொண்டும் இருந்த காட்சிகளைப் பார்த்தேனும் முடிவிற்குகொண்டுவந்திருக்கவேண்டும். ஏதோ தற்போதேனும் காலம்கடந்தாகிலும் சரியான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post