கொரோனா வைரஸ் வுஹான் விசேட ஆய்வு கூடத்தில் உருவானதா? தெளிவான விசாரணைக்கு அதிபர் ஜோ பைடேன் உத்தரவு ! - Yarl Voice கொரோனா வைரஸ் வுஹான் விசேட ஆய்வு கூடத்தில் உருவானதா? தெளிவான விசாரணைக்கு அதிபர் ஜோ பைடேன் உத்தரவு ! - Yarl Voice

கொரோனா வைரஸ் வுஹான் விசேட ஆய்வு கூடத்தில் உருவானதா? தெளிவான விசாரணைக்கு அதிபர் ஜோ பைடேன் உத்தரவு !




அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கோவிட் 19 இற்கான கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பான ஆழமான மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிட்டுளார். கோவிட் தொடக்கப் புள்ளி தொடர்பான விடயங்களை அரசியலாக்குவதாகவும் ,  இப் பேரிடரை கட்டுக்குள் கொண்டுவரும் உலகளாவிய முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் நிகழ்வாகவும் இந்த விசாரணை அமையுமென சீனா குற்றம் சாட்டியுள்ளது.
  
உலக சுகாதார நிறுவனம் கோவிட் 19 தோற்றம் தொடர்பான தனது ஆராய்ச்சியில் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. கோவிட் 19 கிருமி வெளியேறியதாக நம்பப்படும் விசேட கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வுகூடத்தை பார்வையிட அனுமதி வழங்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் சீனாவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றான. 

கொரோனா கிருமி செயற்கையாக  உருவாக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை திட்டமாக மறுத்து வரும் சீனா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் வைரஸை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் கண்டுள்ள தோல்வியை திசை திருப்பும் முகமாக இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன என மேலும் தெரிவித்துள்ளது.
  
அமெரிக்கா உளவுப்பிரிவில் இரண்டு விதமான கருத்துக்கள் அதாவது கொரோனா கிருமி இயற்கையானது என ஒரு சாராரும் செயகையானது என மறுசாராரும் நம்புகின்றனர். இவ்வாறான குழப்பங்களை தவிர்க்கவே தாம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் பைடேன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வெளிப்படைத்தன்மையற்ற நடவடிக்கைகள் கோவிட் கிருமி ஆய்வுகூடத்தில் இருந்து வெளியாகியது என்ற கொள்கை பிரபல்யமடைய காரணம் என உலக சுகாதாரத்துடன் தொடர்புடைய உயர் அதிகாரி யன்ஸ்வ்ங் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post