-தற்காலிக கொட்டகை அமைப்பதற்காக- புலம்பெயர் உறவுகள் அனுப்பிய பணம் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் கையளிப்பு! - Yarl Voice -தற்காலிக கொட்டகை அமைப்பதற்காக- புலம்பெயர் உறவுகள் அனுப்பிய பணம் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் கையளிப்பு! - Yarl Voice

-தற்காலிக கொட்டகை அமைப்பதற்காக- புலம்பெயர் உறவுகள் அனுப்பிய பணம் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் கையளிப்பு!பொன்னாலையில் வீடு எரிந்தமையால் நிர்க்கதியான குடும்பத்திற்கு தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு என நாம் எடுத்த முயற்சிக்கு கிடைத்த 80,000 (எண்பதாயிரம்) ரூபா பணம் குறித்த குடும்பத்திடம் {29} சனிக்கிழமை கையளிக்கப்பட்டது. 

காரைநகரைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத (லண்டனில் வசிக்கும்) நண்பர் ஒருவர் 55,000  ரூபா, பொன்னாலையைச் சேர்ந்த அமரர் நரசிங்கம் குடும்பம் (கனடா) 25,000 ரூபா நிதி வழங்கியிருந்தனர். 

தற்போது குறித்த குடும்பத்தினருக்கு வடக்கு மாகாண சபையின் ஊடாக நிரந்தர வீடு கிடைத்திருக்கின்றது. நிரந்தர வீட்டிற்கான உறுதிமொழி வழங்கப்பட்டமையை அடுத்து தற்காலிக வீடு அமைக்கும் திட்டத்தை நாம் கைவிட்டிருந்தோம். 

குறித்த  வீட்டிற்கான 9,00,000 (ஒன்பது இலட்சம்) ரூபா நிதி பகுதி பகுதியாகவே வழங்கப்படும் என்பதால் கட்டுமானத்திற்கு அவர்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பலம்பெயர் உறவுகளின்  நிதி அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இரு குழந்தைகள் உட்பட நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட மேற்படி குடும்பத்தின் நிர்க்கதி நிலையை எனது முகப்புத்தகத்தில் வெளிப்படுத்தி  உதவி கோரியிருந்தேன்.

இதற்கிணங்க 80,000 ரூபா பணத்தொகையை வழங்கி உதவிய மேற்படி புலம்பெயர் உறவுகளுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். 

எல்லாம்வல்ல பொன்னாலை வரதராஜப் பெருமாள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் எப்போதும்  மகிழ்ச்சியுடன் வைத்திருக்க பிரார்த்திக்கிறோம். 

குறித்த நிதியை பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் கையளிக்கும் போது என்னுடன் பொன்னாலை  ஸ்ரீகண்ணன் சனசமூக நிலையத் தலைவர் செ.றதீஸ்வரன் அவர்களும் பிரச்சமாகியிருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post