யாழ் வர்தகர்களுக்கு வணிகர் கழகம் விடுத்துள்ள விசேட அறிவித்தல் - Yarl Voice யாழ் வர்தகர்களுக்கு வணிகர் கழகம் விடுத்துள்ள விசேட அறிவித்தல் - Yarl Voice

யாழ் வர்தகர்களுக்கு வணிகர் கழகம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்யாழ் குடாநாட்டிலிருந்து வேறு மாகாண ங்களுக்கு பொருட்கள் ஏற்றி இறக்கும் லொறி உரிமையாளர்/ கடை உரிமையாளர்களுக்கு யாழ் வணிகர் கழகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

மேற்படி இன்றிலிருந்து புதிய நடை முறையின் அடிப்படையிலேயே யாழ் குடா நாட்டில் இருந்து வெளி மாகாணங்களுக்கு  பொருட்களை எடுத்துச் செல்வது/பொருட்களை கொண்டு வருவதற்கான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 அதனடிப் படையில் போக்கு வரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கும் லொறி உரிமையா ளர்கள் /கடை உரிமை யாளர்கள் யாழ் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து யாழ் வணிகர் கழகத்தில் ஒப்படைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி பெற்றுத் தரப்படும் என்பதனை வர்த்தகர்களுக்கும்/ லொறி உரிமையாளர் பொதிகள் போக்கு வரத்தில்  ஈடுபடு வோருக்கு தெரியப்படுத்துகின்றோம். 

ஆகையால் விரைவாக படிவங்களை பூர்த்தி செய்து யாழ் வணிகர் கழகத்தில் ஒப்ப டைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.  இத்தகவலை இந்த சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பு :-     
யாழ் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்ட படிவம் தற்போது யாழ் வணிகர் கழக பணிமனையில் பெற்றுக் கொள்ளலாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post