கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊழியருக்கும் தொற்று - Yarl Voice கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊழியருக்கும் தொற்று - Yarl Voice

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊழியருக்கும் தொற்றுகிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நிதிப் பிரிவு ஊழியர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது
குறித்த ஊழியர்  கடந்த வாரம் கொழும்புக்குச் சென்று பின் பொது போக்குவரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியிருந்தார்.

இதன் பின்னர் அவருக்கு காய்ச்சல், தடிமன் ஏற்பட்டுள்ள நிலையிலும் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஊழியர் போக்குவரவுக்கான வாகனத்தில் பிற ஊழியர்களுடன், யாழிலிருந்து கிளிநொச்சிக்கு  தினசரி கடமையாற்ற வந்துசென்றிருக்கின்றார்.

 இந்த நிலையில் இன்று இரண்டாவது கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதற்காக கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது  அவருக்கு காணப்பட்ட அறிகுறியை கொண்டு துரித அன்டிஜன்பரிசோதனை மேற்கொண்டதில் குறித்த  ஊழியருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இதனையடுத்து குறித்த ஊழியர் கிருஸ்ணபுரம் ஐடிஎச் வைத்தியசாலைக்கு
மாற்றப்படவுள்ள  அதேவேளை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை
ஊழியர்களுக்கும்  பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இவருடன்
பணியாற்றிய நிதிக்கிளையினர் மற்றும் வாகனத்தில் சென்று வந்த ஊழியர்கள்
அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post