கொரோனாவால் முடங்கியது கொடிகாமம் - இரானுவம் பொலிஸார் கண்காணிப்பில் - Yarl Voice கொரோனாவால் முடங்கியது கொடிகாமம் - இரானுவம் பொலிஸார் கண்காணிப்பில் - Yarl Voice

கொரோனாவால் முடங்கியது கொடிகாமம் - இரானுவம் பொலிஸார் கண்காணிப்பில்


தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள்  இனங் காணப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பிரதேசத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியானது வெறிச்சோடிய காணப்படுகின்றது குறித்த பகுதியில் இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உள்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது

கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது

அதிகளவு கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post