கண்கள் இரண்டும் இழந்த வாழ்வக மாணவி சாதனை! - Yarl Voice கண்கள் இரண்டும் இழந்த வாழ்வக மாணவி சாதனை! - Yarl Voice

கண்கள் இரண்டும் இழந்த வாழ்வக மாணவி சாதனை!
சுன்னாகம் விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகத்தில் தங்கியிருந்து கல்வி பயிலும் செல்வி ஜெயராசன் லோகேஸ்வரி முற்றாகப் பார்வையற்றவர். 

இன்று வெளியாகிய 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (உ.த.) பரீட்சையிலே 2யு 1டீ பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். 

தமிழ், இந்து நாகரிகம் ஆகிய பாடங்களுக்கு யு சித்தியும் அரசறிவியல் பாடத்துக்கு டீ சித்தியும் பெற்று மாவட்ட ரீதியாக 38 ஆவது இடத்தினைத் தனதாக்கிக்கொண்டுள்ளார். 

அங்கக் குறைவு ஆற்றல் வெளிப்பாட்டுக்குத் தடையில்லை என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளார் செல்வி லோகேஸ்வரி.

0/Post a Comment/Comments

Previous Post Next Post