மாலி நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு அதிபர், பிரதமர், அமைச்சர் கைது! -இராணுவ வசம் அதிகாரங்கள்- - Yarl Voice மாலி நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு அதிபர், பிரதமர், அமைச்சர் கைது! -இராணுவ வசம் அதிகாரங்கள்- - Yarl Voice

மாலி நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு அதிபர், பிரதமர், அமைச்சர் கைது! -இராணுவ வசம் அதிகாரங்கள்-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் இடைக்கால ஆட்சியில் இருந்து இரு இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்ட நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்று இராணுவ ஆட்சி அரங்கேறியது.

மாலியின் இடைக்கால   அரசின் அமைச்சரவை சீரமைப்பு நேற்று திங்கட்கிழமை நடந்தது. இதில் ராணுவ அமைப்பில் இருந்த 2 உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர். 

இதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் அதிபரை கைது செய்தனர்.  இதேபோல் பிரதமர் மற்றும் இராணுவ மந்திரியான சொலேமான் டவ்கோர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதனால், அந்நாட்டில் பதற்ற நிலை காணப்படுகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிமக்கள் ஆட்சியை கொண்டு வர தற்காலிக அரசு முயற்சி செய்து வருகிறது.  எனினும், முக்கிய பதவிகளை இராணுவம் கைப்பற்றி அதிகாரத்தில் இருந்து வருவது ஆளும் அரசுக்கு இடையூறாக உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post